18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கின் போது சுற்றித் திரியும் நபர்களை போலிசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து எச்சரித்து அனுப்பினர்

உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கின் போது சுற்றித் திரியும் நபர்களை போலிசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து எச்சரித்து அனுப்பினர்

எழுதியவர்: mohan May 29, 2021, 11:03 am

கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது இந்த நிலையில் ஊரடங்கின் போது வீட்டை விட்டு வெளியே வந்து கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளில் இளைஞர்கள் சிறுவர்கள் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகமதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கின் போது வெளியே சுற்றித் திரியும் நபர்களை உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையிலான போலிசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர்.

உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்த போது இளைஞர்கள் கேமராவை கண்டதும் ஓடி ஒளிந்து கொண்டனர், தொடர்ச்சியாக பின் தொடர்ந்து சென்று கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களையும், நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவர்களையும் உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜன் அறிவுரை வழங்கி வெளியில் சுற்றக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!