18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அகர கீரங்குடி ஊராட்சியும், அன்பு அறக்கட்டளையும் இணைந்து உதவிக்கரம்…

அகர கீரங்குடி ஊராட்சியும், அன்பு அறக்கட்டளையும் இணைந்து உதவிக்கரம்…

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2021, 7:29 pm

கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஏழை மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவி வருகின்றன. அந்த வகையில் மூத்த பத்திரிகையாளரும் அன்பு அறக்கட்டளையின் நிறுவன தலைவரான கொ.அன்புகுமார், தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகிறார்.

அந்த வகையில் அகரகீரங்குடி முட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு  அப்பகுதியின் ஊராட்சிமன்ற தலைவர் கயல்விழி சரவணன் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகளுடன் சேர்ந்து வறுமையில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. அன்பு அறக்கட்டளையின் நிர்வாகிகளான கொலம்பஸ், அன்புராஜா, துணை ஊராட்சிமன்ற தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!