17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெளியில் சுற்றினால் எமதர்மன் பிடிப்பது உறுதி. உசிலம்பட்டியில் நூதன முறையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய போலிசார்.

வெளியில் சுற்றினால் எமதர்மன் பிடிப்பது உறுதி. உசிலம்பட்டியில் நூதன முறையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய போலிசார்.

எழுதியவர்: mohan May 28, 2021, 6:03 pm

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பொதுமக்களை வேகமாகப்பரவி வருகின்றது.இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு ழுழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.மேலும் பொதுமக்கள் வெளியில் சுற்றாமல் வீட்டிலேயே இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் காவல்துறை சார்பில் நூதன கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.இதன்படி எமதர்ம ராஜா வேடமணிந்த நபர் கொரோனா ஊரடங்கில் பைக்கில் வெளியில் சுற்றினால் கொரோனா பிடித்து உயிரிழந்து எமனிடம் வருவது உறுதி.அதனால் அனவசியமாக வெளியில் சுற்றாதீர்.காய்கறி வாங்க வாரம் ஒருமுறை வந்தால் போதும் எனப் பாட்டுப்பாடி விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினர்.இந்நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜன் தலைமையில் போலிசார் செய்திருந்தனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!