17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புறக்கணிக்கப்படும் கீழக்கரை முத்துசாமி புரம்… சீரமைக்க விடுதலை சிறுத்தைகள் கோரிக்கை..

புறக்கணிக்கப்படும் கீழக்கரை முத்துசாமி புரம்… சீரமைக்க விடுதலை சிறுத்தைகள் கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2021, 5:51 pm

கீழக்கரை  முத்துச்சாமிபுரத்தில் அதன் சுற்றி உள்ள தெருக்களில் முறையாக வார்கால் அமைக்காததால்  கழிவு நீர் நிரம்பி வழிகிறது. உடனடியாக நோய் தொற்று ஏற்படும் முன்பு சரி செய்ய வேண்டும் என்றும், அங்கு உள்ள கழிவு நீர்களை அகற்ற வேண்டும் என்றும் முறையான வார்கால் அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கீழக்கரை முத்துச்சாமி புரத்தில் வார்களில் கழிவு நீர் நிரப்பி ஓடி கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக திர்வு இல்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் இங்கு நகராட்சியில் இருந்து யாரும் வருவதில்லை நோய் தொற்று பயத்தில் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.

சிறு குழந்தைகள் அதிகமாக இருப்பதால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் நோய் சூழல் ஏற்படும் முன்பு நகராட்சி இதில் துரிதமாக செயல்பட்டு அங்கு உள்ள கால்வாய் பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்றும் இருட்டான பகுதிகளில் மின் விளக்குகள் ஏறியவில்லை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பாக கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!