17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தாமரைப்பாக்கம் கிராமத்தில் ஆர்வமுடன் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் .

தாமரைப்பாக்கம் கிராமத்தில் ஆர்வமுடன் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் .

எழுதியவர்: mohan May 28, 2021, 4:11 pm

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி முனியப்பன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா , மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திரா காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கலசபாக்கம் பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் கலசபாக்கம் மற்றும் புதுப்பாளையம் வட்டார மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறையினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர் இதைத்தொடர்ந்து புதுப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மதன்குமார் உத்தரவின்பேரில் காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர் . ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி முனியப்பன், தமிழக அரசு ஏற்படுத்தித் தருகின்ற வைரஸ் நோய் தடுப்பு முகாமை பொதுமக்கள் இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்தினார்அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தும் விதமாக மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார். இம்முகாமில் மருத்துவ குழுவினர், மருத்துவ ஆய்வாளர் எழில், செவிலியர் கோமளவல்லி, காளியம்மா, கிராம நிர்வாக அலுவலர் முருகதாஸ் , ஊராட்சி துணைத்தலைவர் மாணிக்கம் , ஊராட்சி எழுத்தர் ஜெயக்குமார், மற்றும் சத்துணவு மைய பொறுப்பாளர் சுதா பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் நிகழ்வு சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!