தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பொதுமக்களை வேகமாகப்பரவி வருகின்றது.இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு ழுழு ஊரடங்கை
அமல்படுத்தியுள்ளது.மேலும் 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் உசிலை பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு முகாம் நேற்று முதல் நடத்தப்பட்டு வருகிறது.இன்று காலை 8மணிக்கு தடுப்பூசி போட ஆண்கள் பெண்கள் உள்பட 20க்கும் மேற்ப்பட்டோர் வந்தனர்;.ஆனால் மருத்துவப் பணியாளர்கள் வராததால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபொழுது காலை 11.00மணிக்கு மேல்தான் மருத்துவப்பணியாளர்கள் வருவர்.அதுவரை காத்திருக்கவும் எனத் தகவல் தெரிவிக்;கப்பட்டது.கொரோனா தடுப்பூசி போட காலையில் ஆர்வமுடன் வந்த மக்களில் சிலர் மருத்துவப்பணியாளர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள ஆா்வம் காட்டினாலும் அதிகாரிகளின் அலட்சியம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டியில் கொரோனா தடுப்பூசி போட காலையிலேயே பொதுமக்கள் வந்த போதும் மருத்துவர்கள் வராததால் மக்கள் காத்துக் கிடந்தனர்.
எழுதியவர்: mohan May 28, 2021, 1:48 pm




You must be logged in to post a comment.