18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரம் அர்ப்பணிப்பு; வாசு எம்எல்ஏ துவக்கி வைத்தார்..

ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரம் அர்ப்பணிப்பு; வாசு எம்எல்ஏ துவக்கி வைத்தார்..

எழுதியவர்: mohan May 28, 2021, 1:22 pm

புளியங்குடி பார்ட் அறக்கட்டளை சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டி மற்றும் மருத்துவ உபகரணங்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி பார்ட் அரங்கத்தில் அறக்கட்டளை தலைவர் முகைதீன் தலைமையில் நடைபெற்றது. வாசுதேவநல்லூர் எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பார்ட் அறக்கட்டளையின் செயலாளர் ஷேக் காதர், பொருளாளர் அப்துல் கரீம், உறுப்பினர்கள் அபுசாலி, பைஜி, உமர் ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர், எம்.எஸ்.எஃப் தேசிய இணைச்செயலாளர் புளியங்குடி அமீன் வரவேற்புரை ஆற்றி நிகழ்வை தொகுத்து வழங்கினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் குணசேகரன், நகராட்சி ஆணையாளர் குமார் சிங், தென்காசி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் செய்யது சுலைமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் ஈஸ்வரன், வெங்கட்ராமன், முஸ்லிம் லீக் நகர தலைவர் அப்துல் வகாப், மமக மாவட்ட துணைத்தலைவர் அப்துல் ரகுமான், திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பத்திரம் சாகுல் கமீது, காங்கிரஸ் நகரத் தலைவர் பால்ராஜ், மதிமுக நகர செயலாளர் ஜாகிர் உசேன், கல்வத்து நாயகம் தைக்கா முத்தவல்லி முகம்மது எஹியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பயிற்சி மாணவர்கள் அப்பாஸ், அப்துல் ரஹ்மான் ஹமீது, முகைதீன், முகமது சித்தீக், நாகூர் மைதீன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். முடிவில் அறக்கட்டளை துணைத்தலைவர் முகைதீன் ஷா நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!