மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
மலைகளுக்கு சென்று கிழங்கு தேன் எடுத்து வந்து நகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்த இந்த மக்கள் தற்போதைய கொரோனா ஊரடங்கு காரணமாக பெரிதும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.இது குறித்து அறிந்த கத்தார் நாட்டில் உள்ள கத்தார் தமிழ் சங்க நிர்வாகிகள் உசிலம்பட்டி மாஸ்டர் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் மூலமாக இந்த மலைவாழ் மக்களுக்கு ஒரு மாததிற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களின் தொகுப்புகளை நிவாரண உதவியாக வழங்கினர்.அனைத்து மலைவாழ் மக்களையும் சமூக இடைவெளியுடன் அமர வைத்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் கட்டாயம் முக கவசம் அணிந்து அனைவரும் பாதுகாப்புடன் இருந்து அனைவரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தன்னார்வ அமைப்பின் நிறுவனர் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
கத்தார் தமிழ் சங்கம் சார்பில் மலைவாழ் மக்களுக்கு மளிகை தொகுப்புகளை கொரோனா நிவாரண உதவி
எழுதியவர்: mohan May 28, 2021, 1:13 pm




You must be logged in to post a comment.