18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையம் பகுதியில் அமைச்சர்கள் ஆய்வு. அரசு மருத்துவனையில் ஆக்சிசன் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா என மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

ராஜபாளையம் பகுதியில் அமைச்சர்கள் ஆய்வு. அரசு மருத்துவனையில் ஆக்சிசன் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா என மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

எழுதியவர்: mohan May 28, 2021, 6:35 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியில் இதுவரை 28 பேர் கொரோணா தொற்று பாதிப்படைந்ததால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று அந்த பகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தனர். நிகழ்வில் உடன் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், ராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

.தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள மக்களிடம் உங்களுக்கு தேவையான உதவிகள் தடையின்றி கிடைக்கின்றதா? என சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியம் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து ராஜபாளையம் பிஏசிஆர் அரசு மருத்துவமனையினை ஆய்வு மேற்கொண்ட போது ஆக்சிசன் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா மற்றும் படுக்கை வசதிகள் தேவையான வசதிகள் அனைத்தும் வழங்கப்படுகின்றதா என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருநெல்வேலி மற்றும் மதுரைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்படுபவர்களுக்குபோதிய ஆம்புலன்ஸ் வசதி உள்ளதா எனவும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் எந்த ஒரு தங்குதடையின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி சென்றார்

. செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!