தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக 18
வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதில் பொதுக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பாக அதில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.இந்நிகழச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என 250க்கும் மேற்ப்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
உசிலம்பட்டி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
எழுதியவர்: mohan May 27, 2021, 5:39 pm




You must be logged in to post a comment.