திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காரப்பட்டு கிராமத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.புதுப்பாளையம் வருவாய் ஆய்வாளர் திலகா குழந்தை வளர்ச்சி அலுவலர்கள் ஜாஸ்மின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செங்கம் மற்றும் கலசபாக்கம் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் கலசபாக்கம் வட்டார மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறையினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர் இதைத்தொடர்ந்து புதுப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மதன்குமார் உத்தரவின்பேரில் காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர் . ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி , மாவட்டம் நிர்வாகம் சார்பில் நடைபெறுகின்ற வைரஸ் நோய் தடுப்பு முகாமை பொதுமக்கள் இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனைத் தவற விட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அல்லது மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அலைய வேண்டி நேரிடும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்.கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தும் விதமாக மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார். இம்முகாமில்வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாந்த்மருத்துவ குழு சார்பில் மருத்துவ ஆய்வாளர் விஜயகுமார் உடன் , கிராம நிர்வாக அலுவலர் அருண் பிரசாத், புதுப்பாளையம் ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ், சீனிவாசன் முன்னாள் கவுன்சிலர் சுதாகர் ஊராட்சி செயலாளர் அருணகிரி ஊராட்சி துணைத்தலைவர் புனிதவள்ளி சிப்பந்தி சம்பத் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் நிகழ்வு சமூக இடைவெளியுடன் நடைபெற்றது
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.ஊராட்சி மன்ற தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
எழுதியவர்: mohan May 27, 2021, 2:18 pm




You must be logged in to post a comment.