திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள தோப்புப்பட்டி கிராமத்தில் வடக்கு தெரு பகுதியில் நேற்று முன்தினம் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் கொரானா தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் இணைந்து கிராமம் முழுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் பாண்டியராஜன் தலைமையில் கிராமம் முழுக்க கபசுரக் குடிநீர் உரிய கிருமினாசினியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதிமுக ஒன்றிய செயலாளர் ராஜா, மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோடாங்கி நாயக்கன்பட்டி ஊராட்சியில் பகுதியில் கபசுப குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
எழுதியவர்: mohan May 26, 2021, 5:11 pm




You must be logged in to post a comment.