18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் Uகுதிகளில் தோட்டக்கலை துறை மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக காய்கறிகள் விற்பனை

திருப்பரங்குன்றம் Uகுதிகளில் தோட்டக்கலை துறை மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக காய்கறிகள் விற்பனை

எழுதியவர்: mohan May 26, 2021, 4:41 pm

கொரனோ இரண்டாவது அலை ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பழங்கள் வாரச் சந்தைகள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளன.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி மதுரை மாநகராட்சி மூலம் திருப்பரங்குன்றம் மற்றும் திருநகர் சுற்றியுள்ள பகுதிகளில் சரக்கு வாகனம் மூலம் தெருக்கள் வழியாக வீடு வீடாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய படுகின்றன.தோட்டக்கலைத் துறையின் ஏற்பாட்டில் காய்கறி மற்றும் பழங்களின் விலை மலிவாகவும் உள்ளதால் காய்கறிகளை மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் விதமாக நகரும் காய்கறி விற்பனை வாகனம் மூலம் விற்பனை செய்வதை மகிழ்ச்சி என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!