திருவண்ணாமலை மாவட்டத்தில்கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்பினர் சேவை உள்ளத்தோடு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ஆலோசனையின் பேரில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், தமிழக ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பிலும் திருவண்ணாமல அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்க முதற்கட்டமாக இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செலுத்த தேவையான O2 மீட்டர்கள், ஆக்சிஜன் ரெகுலேட்டர்கள், ஆக்சிஜன் முக கவசங்கள், மருத்துவர்கள் பயன்டுத்தும் கையுறைகள், N95 மாஸ்க்குகள், மூன்று அடுக்கு முக கவசங்கள், NRB மாஸ்க்குகள் உட்பட்ட மருத்துவ உபகரணங்களை முன்னாள் மாவட்ட ஆட்சியர் சசிகாந்த் செந்தில் உதவியோடு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தமிழக ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில அமைப்பாளருமான செங்கம் ஜி.குமார் மருத்துவக்கல்லூரி டீன் மருத்துவர் .திருமால் பாபு மற்றும் மருத்துவர் அரவிந்தன் ஆகியோரிடம் வழங்கினார். நிகழ்வின் போது மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் த மோகன் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில பொதுச் செயலாளர் எம்.கே.காமராஜ் ஆகியோர். உடன் இருந்தனர்.மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்திரு. செங்கம் ஜி.குமார் வேண்டுகோளுக்கிணங்க தொழிலதிபர் சி. கே. ஆர். கமல் திருவண்ணாமலை மருத்துவகல்லூரி மருத்துவமணை டீன்.டாக்டர.திருமால் அவர்களிடம் கொரோனா நோயாளிகளை பரிசோதிக்கும் மருத்துவ பணியாளர்கள் செவிலியர்கள் பயன்படித்திட முகக்கவசங்கள் தலை கேப்கள் கையுறைகள் ஆகியவற்றை வழங்கினார்.
தமிழக ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் திருவண்ணாமல அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது
எழுதியவர்: mohan May 26, 2021, 11:56 am




You must be logged in to post a comment.