17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கலசபாக்கம் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை. விவசாயிகள் மகிழ்ச்சி

கலசபாக்கம் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை. விவசாயிகள் மகிழ்ச்சி

எழுதியவர்: mohan May 26, 2021, 11:51 am

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மேக மூட்டமாகவும், ஆங்காங்கே சாரல் மழையும் பெய்து வந்தது. இதனால் இதமான சூழல் நிலவி வந்தது. மீண்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் வெயில் அடிக்க தொடங்கியது. ஆனால் வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கலசப்பாக்கம் சுற்றுப்புற வட்டார பகுதி மேல்பாலூர் கடலாடி காரப்பட்டு ஆகிய இடங்களில் இடி காற்றுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரம் பெய்தது பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இரவு 8 மணி அளவில் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து காற்று வீசிக் கொண்டே திடீரென பலத்த மழை பெய்ய கொட்டித் தீர்த்தது . இதனால் நீண்ட எதிர்பார்ப்புடன் இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!