18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் திடீர் சுழற்காற்று.. மரங்கள் வேராடு சாய்ப்பு… வீடுகள் சேதம்…

கீழக்கரையில் திடீர் சுழற்காற்று.. மரங்கள் வேராடு சாய்ப்பு… வீடுகள் சேதம்…

எழுதியவர்: ஆசிரியர் May 25, 2021, 8:18 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திடீரென வேகமான சுழற்காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது, மின்சார கம்பங்களும் சேதமடைந்து மின்சாரம் பாதிப்பு உண்டானது, பல இடங்களில் வீட்டின் கூரைகளும் சேதமடைந்தது.

கீழக்கரை 21வது வார்டு தட்டான் தோப்பு பகுதியில் வசிக்கும் பாண்டியன் மகன் ரகு என்பவரின் ஓட்டு வீட்டின் அருகே இருக்கும் மாடி வீட்டில் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் சீட் காற்றில் பறந்து விழுந்ததால்  ஓடு சேதாரம் ஏற்பட்டது. அதே போல் இந்து பஜார் அருகில் இருக்கும் வெண் இடத்தை மறைப்பதற்காக வைத்திருந்த இரும்பு தகர சுவர்  சரிந்து கீழே விழுந்தது, மற்றும் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!