வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அம்பேத்கார் நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மனைவி எழிலரசி (40).
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோபாலகிருஷ்ணன் இறந்துவிட்டார்.இவர்களுக்கு 3 பெண்பிள்ளைகள் உள்ளனர்.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கடந்த 2009 -லிருந்து செவிலியராக பணியாற்றி வந்தார்.கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டு குடியாத்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்பு வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனையிலும் பின்பு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று முன்தினம் காலமானார்.எழிலரசியின் படத்திற்கு குடியாததம் அரசு மருத்துவமனையில் இருந்த அனைத்து பணியாளம் மலர் அஞ்சலி செலுத்தினர்.
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டகுடியாத்தம் செவிலியர் உயிரிழப்பு.மருத்துவ பணியாளர்கள் அஞ்சலி
எழுதியவர்: mohan May 25, 2021, 3:03 pm




You must be logged in to post a comment.