18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு..

கீழக்கரை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் May 25, 2021, 2:30 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவமனையில் இன்று (25/05/2021) இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாஷா முத்துராமலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அகியேர் கீழக்கரை அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையம் மற்றும் 30 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் மற்றும் கீழக்கரை மருத்துவமனைக்கு நியமனம் செய்யப்பட்ட புதிய தூய்மை பணியாளர்களை  ஆய்வு செய்தனர்.

மேலும் கீழக்கரை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கீழக்கரை அரசு மருத்துவமனையில் புதிதாக இரண்டு மருத்துவர்கள் மற்றும் கூடுதலாக செவிலியர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வின் போது கீழக்கரை தாசில்தார் முருகேசன்,  கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி,  கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் கீழக்கரை திமுக கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!