17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்லனை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

கல்லனை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

எழுதியவர்: mohan May 25, 2021, 10:23 am

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் பணிபுரியும் 20க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன் வழங்கினார். இதில் ஊராட்சி செயலர் சந்திரன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தமிழக அரசின் தளர்வுகள் அற்ற ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து முன் களப்பணியாளர்களாக செயல்பட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு இந்த அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

தொற்று நோயிலிருந்து பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூய்மைப் பணியாளர்கள் அந்ததந்த ஊராட்சியில் கிருமி நாசினி மருந்து தெளித்தும், குப்பைகள் கழிவுநீர் தேங்க விடாமல் துரிதமாக செயல்பட்டு தூய்மையாக வைத்து வருகின்றனர். இதனை ஊக்குவிக்கும் வகையில் கல்லனை ஊராட்சியில் இந்த அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!