18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை பேரூராட்சி சார்பாக மலிவுவிலை காய்கறிகள் பொதுமக்களுக்கு விநியோகம்

நிலக்கோட்டை பேரூராட்சி சார்பாக மலிவுவிலை காய்கறிகள் பொதுமக்களுக்கு விநியோகம்

எழுதியவர்: mohan May 25, 2021, 10:06 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி சார்பாக தற்போது ஏற்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக   பொதுமக்களுக்கு காய்கறிகள் விலை உயர்வாக சில வியாபாரிகள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மலிவு விலை காய்கறி விற்கும் நடமாடும் காய்கறி விற்பனையை செய்யும் பணி நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை தாசில்தார் சுப்பையா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விற்பனையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் தேவதாசன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் , அலுவலக பணியாளர் செல்லப்பாண்டியன் சுகாதார மேற்பார்வையாளர்கள் மஞ்சுளா, கல்யாணிசுந்தரம் , போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாணி, வருவாய் ஆய்வாளர் சென்னகிருஷ்ணன், கிராம நிர்வாக  கணேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!