17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் ஓட்டுனரின் அலட்சியத்தால் கீழே கொட்டப் படும் அவலம். நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்

ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் ஓட்டுனரின் அலட்சியத்தால் கீழே கொட்டப் படும் அவலம். நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்

எழுதியவர்: mohan May 25, 2021, 6:21 am

மதுரை மாநகராட்சி குடிநீர் லாரிகள் மற்றும் மினி வேன்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது… இந்த நிலையில் இன்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் இணைக்கும் மேம்பாலம் நடுவில் குடிநீர் மினி லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது(TN 58 U 8688) என்கின்ற எண் கொண்ட இந்த மினி லாரி ஓட்டுனர் மினி லாரியில் உள்ள குடிநீர் அனைத்தையும் பாலத்தில் திறந்து விட்டுள்ளார் …அந்த பகுதியாக வந்த சமூக ஆர்வலர் இதை பார்த்து அதை உடனடியாக புகைப்படமாக எடுத்தார் ஓட்டுநர் கேட்டதற்கு எதற்காக தண்ணீரை கீழே போட்டு விடுவார்கள் என்று கேட்டதற்கு இல்லை. அனைத்து உப்பு தண்ணியாக உள்ளது என்று சொன்னால் உடனடியாக குறித்து பார்த்தபோது அனைத்தும் நன்றாகவே இருந்தது… மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யாமல் பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் கொட்டிவிட்டு மக்களுக்கு விநியோகம் செய்ததாக கணக்கு காட்டுகிறார் என தெரியவில்லை கோடைகாலம் என்பதால் இப்பொழுது ஒரு குடம் தண்ணீர் கிடைப்பதற்கு பொதுமக்கள் ஆங்காங்கே அலையோ அலை அலைகின்றன இது போன்று செயல்களில் ஈடுபடும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மாநகராட்சி ஆணையாளருக்கு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்த்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா????

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!