18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம்….

கீழக்கரையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம்….

எழுதியவர்: ஆசிரியர் May 24, 2021, 3:36 pm

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் உத்தரவின்பேரில் வட்டார வள மருத்துவர் டாக்டர் ராசிக் தீன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கீழக்கரையில் பல்வேறு இடங்களில் முகாம் நடத்தி வருகின்றார்கள்.

அதன் தொடர்ச்சியாக இன்று (24/05/2021) கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம் கீழக்கரை மேலத் தெரு பி.எஸ்.எம் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் வந்து தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை செய்தனர்.

இதில் கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!