18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் முழு ஊரடங்கில் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

உசிலம்பட்டியில் முழு ஊரடங்கில் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

எழுதியவர்: mohan May 24, 2021, 11:34 am

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து பகுதிகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தும், வழக்குபதிவு செய்தும், எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை ரவுண்டான பகுதியில் கொரோனா முழு ஊரடங்கு சம்பந்தமாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தேவையில்லாமல் வருபவர்களை போலீசார் அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பினர். மேலும் மருத்துவமணை, அத்யாவசிய காரணங்களுக்கு செல்பவர்களுக்கு மட்டும் உரிய அனுமதிசீட்டு இருந்தால் மட்டும் அனுமதிக்கின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!