மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொங்கபட்டியைச் சேர்ந்த கட்டராமன் மனைவி கருப்பாயி(65). இவர் தனது வீட்டின் முன்பு உட்கார்ந்திருந்த
போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3மர்ம நபர்கள் கருப்பாயி கழுத்தில் அணிந்திருந்த 2பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு அங்கிருந்து தப்பி விட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட கருப்பாயி உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா கால கட்டத்தில் இது போன்று உசிலம்பட்டி பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள பீதி அடைந்துள்ளனர்
உசிலம்பட்டி அருகே கொங்கப்பட்டியில் வீட்டின் முன்பு உட்கார்ந்திருந்த பெண்ணிடம் 2பவுன் தங்க செயின் பறிப்பு
எழுதியவர்: mohan May 24, 2021, 5:29 am




You must be logged in to post a comment.