18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி காய்கறி சந்தை, தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

உசிலம்பட்டி காய்கறி சந்தை, தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

எழுதியவர்: mohan May 23, 2021, 1:25 pm

உசிலம்பட்டி வண்டிப்பேட்டையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் விதிமுறைகளை மீறி பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் விதமாக சுகாதாரதுறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இன்று ஒருநாள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்டிப்பேட்டையில் உள்ள தனியார் சூப்பர்மார்க்கெட்டில் மளிகை பொருட்கள், அத்யாவசிய பொருட்கள் வாங்க கொரோனா விதிமுறைகளை மீறியும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக குவிந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் காய்கறிகளில் விலையும் இருமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!