17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி அருகே கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம்..

தென்காசி அருகே கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம்..

எழுதியவர்: mohan May 22, 2021, 1:30 pm

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமை மற்றும் முககவசம் அணியாதவர்கள் இடமிருந்து ரூ.4400/- அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.தென்காசி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.சமீரன், திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எஸ்.சேதுராமன் ஆகியோர்களின் அறிவுறுத்துதலின் படியும் கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு அலுவலர். சங்கரநாராயணன் வழிகாட்டுதலின் படியும், தென்காசி அருகே உள்ளே ஆய்க்குடி பேரூராட்சி மெயின் ரோடு மற்றும் மெயின் பஜார் பகுதியில் உள்ள காய்கறி கடைகள், பலசரக்கு மற்றும் இதர கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் சமூக இடைவெளி பின்பற்றப்படாத கடைகள் மற்றும் முககவசம் அணியாத நபர்களுக்கு உடனடி அபராத கட்டணமாக ரூ.4400/- வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் தலைமையில், செங்கோட்டை சமுக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அரவிந்தன் ஆய்க்குடி காவல் உதவி ஆய்வாளர் பலவேசம், சுகாதார ஆய்வாளர் கணேசன் மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!