18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்களுக்கு முக கவசம் மற்றும் உணவு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்களுக்கு முக கவசம் மற்றும் உணவு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

எழுதியவர்: mohan May 21, 2021, 3:03 pm

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 30 வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குறுஞ்சி நகர் பகுதியில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு மதிய உணவாக பல்சுவை உணவு பொட்டலங்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில்

அதன் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் வினோத் கண்ணன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் வழங்கினார்.மேலும் அனைவருக்கும் முக கவசம் வழங்கி கொரோனா காலத்தில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் அடுத்தடுத்த உதவிகளை காங்கிரஸ் கட்சி சார்பிலும், திமுக சார்பிலும் செய்து தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என மலைவாழ் மக்களுக்கு உறுதியளித்தனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!