18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் மாா்க்கெட் மூடப்படும். டிஎஸ்பி ராஜன் அதிரடி..

சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் மாா்க்கெட் மூடப்படும். டிஎஸ்பி ராஜன் அதிரடி..

எழுதியவர்: mohan May 20, 2021, 11:47 am

தமிழகம் மழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு கொரோனா முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது. மேலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்யாவசிய கடைகள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள காய்கறி சந்தை, பூ சந்தைக்கு கிராமங்களிலிருந்து ஏராளமானோர் பூ விற்பனைக்காக வருகின்றனர்.

இதனால் பூ சந்தையில் தினமும் ஆயிரக்காணோர் குவிகின்றனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த கோட்டாட்சியர் ராஜ்குமார் உத்தரவுப்படி பூ சந்தையில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தி கயிறு கட்டப்பட்டு தற்போது பூ விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் பூ சந்தையில் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் தனிநபர் இடைவெளி, முக கவசம் அணிந்துள்ளார்களா என்பது குறித்து உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன் ஆய்வு மேற்கொண்டார். முககவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!