சென்னையில் உள்ள போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு செல்போனில் பேசியபோதை ஆசாமி. ஆபாசமாகவும், மிரட்டியும் பேசியுள்ளார். இதை கேட்ட பெண் காவலர்
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீஸ், அது ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியிலிருந்து வந்தது தெரியவந்தது.தகவல் பெற்ற உமராபாத் போலீசார் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினர்.அப்போதும் அந்த போதை ஆசாமி ஆபாசமாக பேசியுள்ளார்.மேலும் நான் பல இடங்களில் குண்டுவைத்துள்ளதாகவும் அது விரைவில் வெடிக்கும் எனவும்,தனக்கு பல தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் பேசியுள்ளான்.தொடர்ந்து அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விசாரித்தனர்.அதில் அந்த போதை ஆசாமி ஆம்பூர் அடுத்ததுத்திப்பட்டு பாங்கி ஷாப் பகுதியில் வசிக்கும் முகமது யாஷிம் (48) என்பதும்அவன் மனைவி பிரிந்து சென்றதால் அதிக போதையில் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து மிரட்டியதும் தெரியவந்தது.இதனையெடுத்து போலீசார் அவனை கைது செய்தனர்.
பல இடங்களில் குண்டுவெச்சி இருக்கேன். போலீசில் செல்போனில் பேசியஆம்பூர் போதை ஆசாமி கைது
எழுதியவர்: mohan May 20, 2021, 11:39 am




You must be logged in to post a comment.