கொரோனா இரண்டாம் அலையால் திரைத்துறையினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன் காரணமாக பிரபலமான திறமைமிக்க பல்வேறு துறைகளை சார்ந்த கலைஞர்களையும் நாம் இழந்து வருகிறோம். அதில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, கபாலி மற்றும் அசுரன் போன்ற திரைப்படங்களில் முக்கிய பாத்திரமாக நடித்த நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுவந்த இவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மதுரை கோசாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நடிகர் ரிதிஷ் வீரா. இவர் சென்னையில் தங்கி சினிமா பணிகளை செய்து வந்தார்.இந்நிலையில் கொரானாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிதிஷ் வீரா உடலை அவரது குடும்பத்தினர் மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அமரர் ஊர்தி வாகனத்தில் அவரது உடல் சென்னையில் இருந்து மதுரை கோசாகுளம் பகுதியில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது அவரது மகள்கள் மற்றும் மனைவி அவரது உடலை பார்த்து கதறி அழுதது பார்ப்போரை கதி கலங்க செய்தது.பிறகு அருகிலுள்ள பட்டிமேடு மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.நடிகர் நிதிஷ் வீராவுக்கும், மதுரை ராம்நாடு பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் திருமணமாகி ஆறு வயதில் ஒரு பெண்ணும் 3 வயதில் ஒரு பெண்ணும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.