17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே மின்னல் தாக்கி பட்டதாரி இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி அருகே மின்னல் தாக்கி பட்டதாரி இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எழுதியவர்: mohan May 19, 2021, 6:36 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூர் பாண்டிகோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற இளைஞர்., பட்டைய படிப்பு முடித்துவிட்டு உசிலம்பட்டியில் உள்ள தண்ணீர் கேன் சப்ளை செய்யும் கடையில் தண்ணீர் கேன் சப்ளையராக தற்காலிகமாக வேலை செய்து வந்தாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று மாலை தனது நண்பரான பெரியசெம்மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அழகுபாண்டி என்பவரது தோட்டத்திற்கு சென்ற ராஜேந்திரன் அங்கு உள்ள எலுமிச்சை செடிகளில் எலுமிச்சை பறித்து கொண்டிருத்ததாகவும், அப்போது பெய்த சாரல் மழையின் போது ராஜேந்திரன் மீது மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் கருகிய நிலையில் சுருண்டு விழுந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலிசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவமறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் வாலிபர் ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மின்னல் தாக்கி பட்டதாரி இளைஞர் பலியான சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உசிலைசிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!