17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் ரயில்வே பாலத்தின் அருகில் முதியவர் பிணமாக கிடந்தார். திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

திருப்பரங்குன்றம் ரயில்வே பாலத்தின் அருகில் முதியவர் பிணமாக கிடந்தார். திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

எழுதியவர்: mohan May 17, 2021, 6:54 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் ரயில்வே பாலத்தின் அருகே காவி உடையணிந்த ஒருவர் இறந்து கிடந்ததாக திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் வந்தது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் ரயில்வே பாலத்தின் அருகே காவி உடையணிந்த ஒருவர் இறந்து கிடப்பதாக திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் வந்தது இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டலமணிக்கம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் பரமேஸ்வரன் (வயது 62 )என்று தெரியவந்தது.கடந்த சில வருடங்களாக குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பிச்சை எடுத்து சுற்றி வந்துள்ளார். தங்குவதற்கு இடமில்லாமல் ரயில்வே பாலத்தின் அருகே உள்ள திண்டில் தங்கியுள்ளார் .நேற்று இரவு அங்கு தங்கியிருந்த போது அவர் இறந்ததாக தெரிகிறது அதனை தொடர்ந்து திரும்பரங்குன்றம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!