18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டையில் தந்தை இறந்த செய்தியை கேட்டு மகளும் உயிரிழப்பு

ராணிப்பேட்டையில் தந்தை இறந்த செய்தியை கேட்டு மகளும் உயிரிழப்பு

எழுதியவர்: mohan May 16, 2021, 9:31 am

ராணிப்பேட்டை மாவட்டம் காரை நேரு நகரை சேர்ந்த சம்பத் (63) ஓய்வுபெற்ற தனியார் ஓட்டுநர். இவருக்கு நேற்று சனிக்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த தகவல் அவரது மகள் ரேணுகாதேவி (32) தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டதும் ரேணுகாதேவி மயக்கமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. ரேணுகாதேவி தனியார் ஷூகம்பெனியில் பணிபுரிந்து வந்தார். தந்தை மகள் ஒரே நேரத்தில் இறந்தது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!