18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தன்னுடைய அப்பளகம்பெனியை கொரானா சிகிச்சை மையமாக பயன்படுத்த கோரி மாவட்ட ஆட்சி தலைவர்க்கு பாலன் மனு

தன்னுடைய அப்பளகம்பெனியை கொரானா சிகிச்சை மையமாக பயன்படுத்த கோரி மாவட்ட ஆட்சி தலைவர்க்கு பாலன் மனு

எழுதியவர்: mohan May 15, 2021, 10:11 am

கொரானா வைரஸ் பெருந்தொற்று காரணமாக தினமும் ஏராளமானோ வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் படுக்கைகள் நிரம்பியுள்ள நிலையில் ஆக்ஸிஜன் படுக்கை வசதி உட்பட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.மேலும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கொரானா சிகிச்சை மையங்களும் நிரம்பி ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமம் மல்லிகை கார்டனை சேர்ந்த அப்பள கம்பெனி உரிமையாளர் பாலன் என்பவர் தன்னுடைய அப்பள கம்பெனியை கொரானா சிகிச்சை மையத்துக்கு பயன்படுத்தும்படி மாவட்ட ஆட்சி தலைவர்க்கு மனு அளித்துள்ளார்.இவருடைய இத்தகைய மனிதாபிமான செயலுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பேட்டியளித்த பாலன்,

நான்மதுரை மாவட்டம் T.கல்லுப்பட்டியில் சொந்தமாக பெரிய அப்பள கம்பெனி நடத்தி வருகிறேன்,என்னுடைய தகப்பனார் காலத்திலிருந்து பாரம்பரியமாக இன்று வரை அப்பள தொழில் செய்து வருகிறேன்.தற்போது இந்த கொரானா பெருந்தொற்று வைரஸ் காரணமாகநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைவசதி இன்றி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதாலும்ஊரடங்கு அமலில் உள்ளதால் காலியாக இருக்கும் அப்பள கம்பெனியை குரானா சிகிச்சைக்கு பயன்படுத்த முடிவு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர்க்குதொலைபேசி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் மனு அளித்துள்ளேன், அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இதற்கு நடவடிக்கை எடுத்து குரானா சிகிச்சைக்கு பயன்பட வழிவகை செய்து தருவதாக உறுதி அளித்தார்.மேலும் இது தான் இது சம்பந்தமாக சுகாதாரத்துறை செயலாளர் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவித்து உள்ளேன்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!