திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்.
இவரது 18 வயது மகன் சஞ்சீவி. இவர் அவரது உறவினரான சவுந்தராஜன் உடன் அப்பகுதியில் உள்ள ராஜேந்திரனின் விவசாய நிலத்தில் ஏர் உழுதுகொண்டு இருந்துள்ளனர்.உணவு சாப்பிட டிராக்டர் டிரைவர் சவுந்தர்வண்டியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.அப்போது சஞ்சீவி தான் டிராக்டரை இயக்குவதாக கூறி செல்போனில் செல்ஃபி எடுத்து தனது ஸ்டேட்ஸில் வைத்துள்ளார்.பின்னர் டிராக்டரை இயக்கியுள்ளார்.அப்போது ஓட்டத் தெரியாமல் ஓட்டியதில் அங்கிருந்த விவசாய கிணற்றில் டிராக்டருடன் தலைப் குப்புற கவிழ்ந்து நீரில் மூழ்கி உள்ளார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டு இருந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்ற முயன்று உள்ளனர். ஆனால் முடியவில்லைஇதுகுறித்து தகவல் அறிந்த அம்பலூர் காவல்துறை வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றி 4 மணி நேர போராட்டத்திற்கு பின்பு டிராக்டர் மற்றும் சஞ்சீவி உடலை மீட்டனர்.சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம்சின்னமோட்டுர், புத்துக் கோவில் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
வாணியம்பாடி அருகே பரிதாபம்.செல்ஃபி மோகம் – டிராக்டரோடு கிணற்றில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு
எழுதியவர்: mohan May 15, 2021, 7:45 am




You must be logged in to post a comment.