17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவேடகம் கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இரண்டு பெண்கள் மீது டாரஸ் லாரி மோதி விபத்து.

திருவேடகம் கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இரண்டு பெண்கள் மீது டாரஸ் லாரி மோதி விபத்து.

எழுதியவர்: mohan May 14, 2021, 6:43 am

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் கிராமத்தில் தெப்பக்குளத்தெருவில் வசிக்கும் பெரிய கருப்பு பிள்ளை (வயது 84 ) முதியவர் இயற்கை எய்தினார், இவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உறவினர்கள் குறைந்த அளவே கூடினர்,இதில் துக்க நிகழ்ச்சி யில் இறுதி சடங்கு சம்பிரதாயங்கள் செயது வந்து உள்ளார்கள், அப்போது பெண்கள் நீர் மாலை குடம் எடுக்கும் நிகழ்வு நடந்தது, இதில் கலந்து கொள்ள துக்க வீட்டினரும், உறவினர்கள் கலந்து கொண்டு நீர் மாலை குடம் எடுக்க சாலை அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் நீர் எடுக்க சாலை ஓரமாக சென்றனர்அப்போது விருதுநகரில் இருந்து டாரஸ் லாரி, இந்த துக்க நிகழ்ச்சியினர் கூட்டத்தில் புகுந்தது இதில் மூன்று பெண்கள் மீது மோதி அருகே உள்ள மின் கம்பத்தில் விபத்து ஏற்படுத்தி மோதி நின்றது,இதனை கண்ட ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்தில் காயம் அடைந்தவர்களை காப்பாற்ற முயன்ற னர், இதில் படுகாயமடைந்த மூன்று பெண்களில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்,பொன் மலர் (வயது 40),ராணி (வயது 40 ) தொடர்ந்து படுகாயம் அடைந்த மற்றொரு பெண்ணை 108 அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,சம்பவ இடத்திலேயே பலியான இரண்டு பெண்களின் உடலை சோழவந்தான் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதனை அடுத்து லாரி ஒட்டுனரை பிடித்து வைத்து இருந்த ஊர் பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றார்கள், தொடர்ந்து சோழவந்தான் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ சுலோச்சனா வழக்கு பதிவு செய்து, டாரஸ் லாரி ஒட்டுனர் செல்வத்தை (வ53) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்,துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த உறவினர்கள் விபத்தில் உயிரிழந்த இரண்டு பெண்களின் உடலை கண்டு அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், கதறி அழும் காட்சி நம் நெஞ்சை பதர வைக்கிறது,இந்த கோர விபத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளனர்,

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!