18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளம் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்த ஆண் உடல் மீட்பு- காவல்துறையினர் விசாரணை.

திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளம் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்த ஆண் உடல் மீட்பு- காவல்துறையினர் விசாரணை.

எழுதியவர்: mohan May 14, 2021, 6:20 am

மதுரை திருப்பரங்குன்றம் தாலுக்கா முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் பழனிகுமார் (வயது40). நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.இந்த நிலையில் இன்று காலையில் சரவணப் பொய்கை தண்ணீரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.அதன் பேரில் விரைந்து வந்த திருப்பரங்குன்றம் காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை செய்ததில் அது பழனிக்குமார் என்பது தெரியவந்தது.எனவே பிரேதத்தை உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் பழனிக்குமார் மரணம் குறித்து திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!