17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலைய மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர் (CISF) இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை விமான நிலைய மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர் (CISF) இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

எழுதியவர்: mohan May 13, 2021, 10:08 am

தமிழகத்தில் கொரானா இரண்டாம் அலை தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலியாக விமான நிலையங்களுக்கு, வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவு பயணிகள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர்.இதனால் மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.வெளிநாட்டு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் மூலமாக விமான நிலைய ஊழியர்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் அனைவருக்கும் கொரனோ பரிசோதனை செய்யப்பட்டது.இந்த நிலையில் இன்று பரிசோதனை முடிவுகள் வெளியானது அதில் மதுரை விமான நிலையத்தில் 15க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் தற்போது நேற்று மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர் இருவருக்கு கொரனோ தொட்டு உறுதியானது.எனவே அவர் வாசித்திருந்த இருப்பிடம் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அவருடன் பணிபுரிந்த சக வீரர்களுக்கும் பரிசோதனையானது செய்யப்பட்டு வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!