17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் ஜெ.விக்டர் தமிழக அரசுக்கு கோரிக்கை.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் ஜெ.விக்டர் தமிழக அரசுக்கு கோரிக்கை.

எழுதியவர்: mohan May 13, 2021, 7:19 am

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் ஜெ.விக்டர் தமிழக அரசுக்கு கோரிக்கை” குறும்பட இயக்குனரும் நடிகரும் சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர் கூறுவது :- 2019 ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடந்தது. இதில் தலைவராக நாசரும், செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்திக் ஒரு அணியாகவும், தலைவராக பாக்யராஜும், செயலாளராக ஐசரி கணேசன்-ம், பொருளாளராக பிரசாந்த் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. உறுப்பினர்கள் போட்ட ஓட்டு பேங்க் லாக்கரில் உள்ளது. இன்னும் ஓட்டு எண்ணவில்லை. ஏன் எதற்காக என்று தெரியவில்லை. ஓட்டு என்ன படுமா அல்லது மறு எலக்சன் நடைபெறுமா தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு உடனே தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கொரோனாவால் ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு சரியாக நடைபெறாததால் நடிகர்-நடிகைகளுக்கு அரசு நிவாரணம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!