செங்கத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்து முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தும் வட்டாட்சியர் மனோகரன் உத்தரவிட்டனர்.
செங்கம் பகுதியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, செங்கம் வட்டாட்சியர் மனோகரன் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் சார்பில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில்தலைமையில், வட்டாட்சியர் மனோகரன், வருவாய்த்துறை அதிகாரிகள், செங்கம் காவல் ஆய்வாளர் சரவணன், செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் ஆகியோரது தலைமையில் செங்கம் , பழைய பேருந்து நிலையத்தின் அருகில் அத்தியாவசிய கடைகளுக்கு அனுமதி அளித்த நிலையில் , அனுமதியில்லாத லஷ்மி காம்ப்ளக்ஸில் அனுமதி இன்றி 12 மணிக்கு மேல் திறந்திருந்த காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த யாசின் மற்றும் சுல்தான் ஆகியோர்களுக்கு சொந்தமான மொபைல் கடை மற்றும் துணிக்கடைக்கு வட்டாட்சியர் மனோகரன் தலைமையில் திடீர் ஆய்வு செய்து, விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்தும் கடைகளை பூட்டி சீல் வைத்து எச்சரித்தனர்
கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு பூட்டி சீல் வைத்து செங்கம் வட்டாட்சியர் அதிரடி
எழுதியவர்: mohan May 12, 2021, 3:31 pm




You must be logged in to post a comment.