17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் கபசுர குடிநீர் முக கவசம் வழங்கல்..

நெல்லையில் கபசுர குடிநீர் முக கவசம் வழங்கல்..

எழுதியவர்: mohan May 12, 2021, 10:05 am

நெல்லையில் கொரோனாவை தடுக்கும் வகையில் கபசுர நீர்,முக கவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ஆகியவை வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா உள்ளிட்ட நோய்க் கிருமிகளை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது ஒன்றே முக்கியம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் நெல்லை அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் அரசினர் சித்த மருத்துவ கல்லூரி மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி இணைந்து சமாதானபுரத்தில் கபசுரக் குடிநீர் மற்றும் இலவச முக கவசம் மற்றும் துண்டு பிரதிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எஸ். முகமது முஸ்தபா மாநில ஒருங்கிணைப்பாளர் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம், சேர்மராஜ் மாநில அமைப்பாளர் குருநாதன் மாநில துணைச் செயலாளர் கண்ணன் மாநில துணைத் தலைவர் மற்றும் பதுரு ஸமான், மாநில செயலாளர் கோல்டு கிங் பர்னபாஸ் மாநில பொருளாளர் அபுபக்கர் சித்திக் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பொது மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் இலவச முககவசம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!