திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் திருவண்ணாமலை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தோக்கவாடி பெட்ரோல் பங்க் அருகே செ.நாச்சிபட்டு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 60) என்பவர் செங்கத்தில் இருந்து தனது பணிகளை முடித்துக் கொண்டு மிதிவண்டியில் வீட்டிற்கு
சென்றுள்ளார் அப்போது இவருக்குப் பின்புறமாக வந்த லாரி ஒன்று அதிவேகமாக மோதியதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்தார். தகவலறிந்த செங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமுற்றவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்குசிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர்,பிரேத பரிசோதனைக்காக உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் சைக்கிளில் சென்ற நபர் மீது அதிவேகமாக லாரி மோதி ஒருவர் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கு உதாசீனப்படுத்தி விட்டு வெளியில் தேவை என்று சுற்றி வருவதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
செங்கம் பகுதியில் முழு நேர ஊரடங்கு போதிலும் அதிவேகமாக வந்த லாரி மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
எழுதியவர்: mohan May 11, 2021, 5:43 pm




You must be logged in to post a comment.