18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்பட்டன.

உசிலம்பட்டியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்பட்டன.

எழுதியவர்: mohan May 6, 2021, 12:01 pm

தமிழகம் முழுவதும் கொரோன தொற்று இரண்டாம் அலையாக உருவெடுத்து வேகமாக பரவும் நிலையில் அதனைதடுக்கும் விதமாக பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இன்று முதல் பால், மருந்துகடைகளை தவிர அனைத்து கடைகளும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்பட வேண்டுமென என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. அதனை தடுக்கும் விதமாக கொரோனாவிற்கு தமிழக அரசு விதிக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடிக்காமல் உசிலம்பட்டியில் வழக்கம் போல் அனைத்து கடைகளும் காலை முதல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறது. டீ கடைகளில் வழக்கம்போல் டீகடைகள், பேக்கரிகளில் அமர்ந்து டீ அருந்துதல், மளிகை கடைகள், காய்கறி கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கூட்டமாக நிற்பது, மற்றும் பியூட்டி பார்லர், சலூன் கடைகள் உள்ளிட்ட கடைகள் வழக்கம் போல் செயல்பட்டது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!