17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட தகறாரில் ஒருவர் படுகொலை..

மதுரை அருகே சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட தகறாரில் ஒருவர் படுகொலை..

எழுதியவர்: ஆசிரியர் May 6, 2021, 1:24 am

மதுரை மாவட்டம் வலையங்குளம் கிராமத்தில் சீட்டு விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் வலையங்குளம் கிராமத்தில் பல தரப்பட்ட சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (05/05/2021) மாலை பல நபர்கள்  சேர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தகராறில் வலையங்குளம் அருகே உள்ள சோழங்குருணி கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி மகன் வீரணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த பெருங்குடி காவல்துறையினர் பிரேதத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!