17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் திடீர் மழை – மக்கள் குதுகலம்

செங்கத்தில் திடீர் மழை – மக்கள் குதுகலம்

எழுதியவர்: mohan May 4, 2021, 5:52 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் மதியத்திலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் வானிலை மாறி திடீரென்று மழை பெய்தது. இதனால் வெயில் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீர் மழையால் சிறுவர்கள் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனையடுத்து பருவமழைப் பொய்ப்பால் குடிநீர் பஞ்சமும் கடுமையாக தலைவிரித்து ஆடத்தொடங்கியது.இந்நிலையில் வெயில் 100 டிகிரி இருந்த நிலையில் மழை பெய்து வந்தது. செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டு , முன்னூர் மங்கலம் , வளையாம்பட்டு, வலசை, உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மழை பொழிவு காணப்பட்டது. இந்த திடீர் மழை பொழிவால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!