18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தனது சொந்த செலவில் கபசுரகுடிநீர் வழங்கிய ஊராட்சி தலைவா்

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தனது சொந்த செலவில் கபசுரகுடிநீர் வழங்கிய ஊராட்சி தலைவா்

எழுதியவர்: mohan May 1, 2021, 12:12 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜக்காள்பட்டி ஊராட்சிட்குட்பட்ட பாறைப்பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு அவர் மதுரையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஊராட்சி தலைவர் சித்ராபால்ராஜ் தலைமையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் சுகாதார பணியாளர்களை கொண்டு கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

அதனைதொடர்ந்து பாறைப்பட்டி கிராமம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு மக்களின் பார்வையில் படும்படியே பொதுஇடத்தில் தனது சொந்த செலவில் கபசுர குடிநீரை காய்ச்சி வீடு வீடாக சென்று ஊராட்சி மன்றத் தலைவர் நோய்எதிர்ப்பு சக்தி மிகுந்த கபசுரகுடிநீர் மற்றும் பாசிப்பயிறை வழங்கினார்.உடன் 58 கிராம கால்வாய் இளைஞா்கள் குழு சௌந்திரபாண்டியன் தலைமையில் இளைஞா்கள் களப்பணியாற்றினா். மக்களுக்காக தனது சொந்த செலவில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக செயல்பட்ட ஊராட்சி தலைவருக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டுகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!