17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் 2 ஆம் தவணை தடுப்பூசியை வருவாய்த்துறை அமைச்சர் செலுத்தி கொண்டார்.

மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் 2 ஆம் தவணை தடுப்பூசியை வருவாய்த்துறை அமைச்சர் செலுத்தி கொண்டார்.

எழுதியவர்: mohan May 1, 2021, 6:51 am

தமிழகத்தில் கருத்து கணிப்புகள் வெற்றி பெற்றதில்லை, 2016 ல் கருத்து கணிப்புகள் பொய்யாகியுள்ளது என மதுரையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டிமதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் 2 ஆம் தவணை தடுப்பூசியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செலுத்தி கொண்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் “தடுப்பூசி எடுத்து கொள்வதில் மக்களிடையே நம்பிக்கை ஏற்ப்பட்டுள்ளது, மக்கள் தாமாகவே முன் வந்து தடுப்பூசியை எடுத்து கொல்கிறார்கள், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள், மருத்துவர்கள், காவல்துறை உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் மகத்தான சேவையை ஆற்றி வருகிறார்கள், மதுரை மாவட்டத்தில் தேவையான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது, கொரைனா தொற்றை கண்டறிய அதிக அளவில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுகிறது, தடுப்பூசி பற்றாக்குறை என்பது இல்லை, மக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும், தடுப்பூசி மட்டுமே மிகப்பெரிய ஆயுதம், கொரைனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியால் மட்டுமே முடியும், ஆக்ஸிசன் பற்றாக்குறை என்பது இல்லை, கருத்து கணிப்புகள் தமிழகத்தில் வெற்றி பெற்றதில்லை, 2016 ல் கருத்து கணிப்பு பொய் ஆகி உள்ளது, கருத்து கணிப்பை வைத்து திமுக 2 நாட்களுக்கு மகிழ்ச்சி அடையலாம், அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும், முதல்வர் மக்களுக்கு செய்த சேவைக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும், மக்களின் வாக்குகள் மட்டுமே வெற்றியை தரும், அதிமுக சாமானியர்களால் உருவாக்கப்பட்டது, முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவார்” என கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!