17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை பேரூராட்சியில் கபசுரக் குடிநீர் வழங்கும் விழா.

நிலக்கோட்டை பேரூராட்சியில் கபசுரக் குடிநீர் வழங்கும் விழா.

எழுதியவர்: mohan April 30, 2021, 5:29 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நேற்று காலை நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு தலைமையில் கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் மற்றும் எலுமிச்சம்பழ குடிநீர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் கல்யாணி, மஞ்சுளா, அலுவலக தலைமை மேற்ப்பார்வையாளர் செல்லப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கபசுரக் குடிநீர் மற்றும் எலுமிச்சம்பழம் நீர் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும் முதியோர்களுக்கும் வழங்கப்பட்டது. படவிளக்கம் நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய போது எடுத்த படம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!