17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முடி திருத்தகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்; மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர் கோரிக்கை..

முடி திருத்தகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்; மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர் கோரிக்கை..

எழுதியவர்: mohan April 30, 2021, 7:02 am

முடிதிருத்தகங்கள் (சலூன் கடைகள்) செயல்பட அனுமதிக்க வேண்டும் என மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் தென்காசி மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நகர தலைவர் முருகன், செயலாளர் ஜெகன் மற்றும் பலர் கடையநல்லூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டும் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். பசி மற்றும் கடன் தொல்லை காரணமாக முடிதிருத்தும் தொழிலாளர்கள் பலர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் நடைபெற்றது. தமிழக அரசினால் அறிவிக்கப்பட்ட ரூ.2000 நிவாரண உதவியும் தங்களில் பலருக்கு கிடைக்க வில்லை. அந்த பொருளாதார பின்னடைவில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாத சூழ்நிலையில் மீண்டும் சலூன் கடைகள் அடைப்பு என்பது தங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. எனவே சலூன் கடைகளை திறந்து, செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!