18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரு வேறு சம்பவங்களில் நகைகள் கொள்ளை .

இரு வேறு சம்பவங்களில் நகைகள் கொள்ளை .

எழுதியவர்: mohan April 29, 2021, 7:05 am

கேன்ட் பேக்குடன் தங்க நகை திருட்டுமதுரை மாட்டுத்தாவணியில் பயணியிடம்கேன் பேக்குடன் தங்க நகையை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி கயத்தாறு வைசேர்ந்தவர் ராயப்பராஜ் மனைவி ராமலட்சுமி 35. இவர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.அப்போது அவர் வைத்திருந்த ஹேண்ட் பேக்கை மர்ம ஆசாமி திருடிச் சென்று விட்டார். அந்த பையில் ஐந்து பவுன் தங்க நகை இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ராமலெட்சுமி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோன்று மற்றொரு சம்பவத்தில்… நகை பட்டறையில்38 பவுன் நகை அபேஸ்ஊழியர் கைவரிசைமதுரை தெற்குமாசி வீதி பச்சரிசி காரத்தெரு சொக்ககொத்தனார் தெருவை சேர்ந்தவர் உத்தம் பக்ரியா 34 . இவர் கான்சாமேட்டுத் தெரு மேட்டுக்கம்மாளத்தெருவில் நகைசெய்யும் பட்டறை நடத்திவருகிறார். இங்கு நகை செய்வதற்காக கொடுக்கப்பட்ட 38 பவுன் நகையை இங்கு வேலை செய்த ஊழியர் திருடிச் சென்று விட்டனர். இந்த திருட்டு தொடர்பாக உத்தம் பாக்குரியா தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற பட்டறை ஊழியர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமித்ஷாவை தேடிவருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!